அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தின் மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடரில் இன்று(21.07) மூன்று போட்டிகள் நடைபெற்றன.
குழு A இற்கான போட்டியில் சுவிற்சலாந்து மகளிர் அணி பிலிப்பைன்ஸ் மகளிர் அணியினை 2-0 என வெற்றி பெற்றுக் கொண்டது.

குழு B இற்காக நடைபெற்ற கனடா மகளிர் மற்றும் நைஜீரியா மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி கோல்களின்றி சமநிலையில் நிறைவடைந்தது.
குழு C இற்கான போட்டியில் ஸ்பெயின் மகளிர் அணி, கொஸ்டரிக்கா மகளிர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.