இரண்டு வகை மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி குறித்த இரண்டு வகை மயக்க மருந்துகளும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறொரு மயக்க மருந்து பயன்படுத்தப்படஉள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், சில சந்தர்ப்பங்களில் சில மருந்துகளை பயன்படுத்துவதால் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அவ்வாறான சமயங்களில் அந்த மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவது இயல்பான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரச மருந்துகள் சட்ட கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே மருந்துகள் எப்போதும் தரப்படுத்தப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.