வாத்துவ – தல்பிட்டிய கடல் எல்லையில் நேற்று (20.07) மீன்பிடிக்கப்பலொன்று கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடி பணிகளுக்காக குறித்த படகில் இருவர் பயணித்ததாகவும், அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் வெரகம வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படகில் பயணித்த மற்றைய நபர் கரையிலிருந்த மீனவர்கள் குழுவினால் மீட்கப்பட்டுள்ளார்.