சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, 2023ம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் நேற்று (20.07) வரையான காலப்பகுதியில், 7,14,598 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், இம்மதத்தில் கடந்த 20 நாட்களில் மட்டும் 89,724 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதில், 10,184 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளும், 5,963 சீன சுற்றுலாப் பயணிகளும், 15,141 ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆனதை விட அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version