அமெரிக்க அங்கீகாரம் பெற்ற 43வது பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் இராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உதவி திட்டத்தில் பீரங்கி, வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் தரைவழி வாகனங்கள், போர் தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவை அடங்கும் என்றும் குண்டுகள் அடங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 பெப்ரவரி முதல் இதுவரையில் உக்ரைனுக்கு அமெரிக்கா 41 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.