நாட்டில் யானைக்கால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் யானைக்கால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய யானைக்கால் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கால்வாய்களை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குறித்த யானைக்கால் நோயாளர்கள் அதிகமாக பதிவாவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் செல்லப்பிராணிகளாலும் , 64% ப்ரூஜியா மலாய் என்ற ஒட்டுண்ணியாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் மனிதர்களுக்கு நீண்டகால குறைபாடுகளையும் பலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாக அடையாளங்காணப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏற்படாவிடினும்,
நீண்ட காலம் வீங்கிய கைகள் மற்றும் கால்களுடன் தங்கள் முழு வாழ்க்கையையும் கழிக்க நேரிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் உள்ளவர்கள் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் சிக்கல்களுக்கும் பெரிதும் ஆளாவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply