அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பித்து நடைபெற்று வரும் மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டி தொடரின் மூன்றாம் நாள் போட்டிகள் நான்கு இன்று நடைபெற்றுள்ளன.
குழு C இற்கான போட்டியில் ஜப்பான் மகளிர் அணி சிம்பாவே மகளிர் அணியினை 5-0 என வெற்றி பெற்றது.

குழு D இற்காக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து மகளிர் அணி, ஹெயிட்டி மகளிர் அணியினை 1-0 என வெற்றி பெற்றது. இன்னுமொரு போட்டியில் டென்மார்க் மகளிர் அணி, சீனா அணியை 1-0 என வெற்றி பெற்றது.
குழு E இற்கான போட்டியில் அமெரிக்கா அணி வியட்நாம் அணியை 3 – 0 என வெற்றி பெற்றது.