சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் கங்குவா.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பம் கொண்டு உருவாகி வரும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், சூரியாவின் நடிப்பில் உருவாகும் ஒரு மாறுபட்ட திரைப்படமாக இது இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் தற்போது இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.