மரக்கறி விதைகள் இறக்குமதியை நிறுத்த தீர்மானம்’!

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மரக்கறி விதைகள் இறக்குமதியை 100 வீதத்தால் நிறுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு தேவையான மரக்கறி விதைகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயிர்ச்செய்கைக்குத் தேவையான மரக்கறி விதைகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், இறக்குமதி செய்யப்படும் விதைகளுக்கு விவசாயிகள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக மரக்கறிச் செய்கையின் மூலம் போதிய வருமானத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்த விடயத்தை கருத்திற் கொண்டு இந்நாட்டின் பயிர்ச்செய்கைக்கு தேவையான மரக்கறி விதைகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Social Share

Leave a Reply