சீனாவில் பாடசாலை ஒன்றின் ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் தற்போது கடும் மழை பெய்து வருகின்ற நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது, விளையாட்டு மைதானத்தில் சுமார் 19 பேர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனவும் கூறப்படுகிறது. .
இந்த விபத்து தொடர்பில் குறித்த கட்டிடத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.