நோர்வே தூதரகத்தின் புதிய அறிவிப்பு!

இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலத்தீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்று அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என நோர்வே தூதரகம் அதன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் என்ற தனது முகநூல் பக்கத்தின் செயற்பாடுகளையும் நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள தூதரகம், புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகத்தின் முகநூல் பக்கத்தைப் பின்தொடருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுடனான அதன் தற்போதைய செயற்பாடுகள் அனைத்தும் புதிய பேஸ்புக் பக்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது @NorwayAmbLK எனும் ட்விட்டர் கணக்கு புதுப்பிக்கப்பட மாட்டாது என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெடல் தெரிவித்துள்ளார்.

தகவல்களுக்கு @norwayinindia எனும் இணைய முகவரியை பின்தொடருமாறு Trine Jøranli Eskedal கேட்டுக்கொண்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version