இலங்கை தமிழரான பிரதாபன் என்பவர் தமிழகத்தில் தனது சாதனை பயணத்தை நேற்று (23.07) ஆரம்பித்திருந்தார்.
3000 கிலோ மீட்டர் தூரத்தினை 40 நாட்களில் 38 மாவட்டங்களுக்கு பயணிக்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.
நேற்றைய தினம் மெரீனா கடற்கரையில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் சென்று(45 Km) அங்கிருந்து காஞ்சிபுரம் நகரை(46Km) வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று (24.07) காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் வரை செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நாள் என்பதால் உடம்பு அசதியாக உள்ளதாக தெரிவித்த அவர், பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும்போது அது சரியாகிவிடும் என்றும், தனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
“மரங்கள் எங்கள் உயிர், மரம் வளர்ப்போம். இயற்கையை காப்போம்” எனும் பதாதையை சைக்கிளில் தாங்கிய வண்ணம் தனது பயணத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.
