வலைப்பந்து போட்டியில் இலங்கைக்கு தோல்வி

உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடருக்காக தென் ஆபிரிக்கா சென்றுள்ள இலங்கை அணி பொஸ்வான அணியுடனும் அந்த நாட்டின் கழக அணிகளுடனும்அங்கே போட்டிகளில் விளையாடி வருகின்றது. நேற்று நான்காவதும் இறுதியுமான போட்டி பொஸ்வானா அணிக்கெதிராக இடம்பெற்றது.

இந்தப் போட்டியின் முதல் காற்பகுதி ஆட்டம் இறுக்கமாக இருந்த அதேவேளை இலங்கை அணி 15-13 என முன்னிலை பெற்றிருந்தது. அரைப்பகுதி நிறைவடைந்த வேளையில் பொஸ்வானா அணி 29-25 என முன்னிலை பெற்றது. அடுத்த காற்பகுதியில் இலங்கை அணி போராடிய போதும் பொஸ்வானா அணி 44-38 என முன்னிலை பெற்றது. இறுதிக் காற்பகுதியில் இலங்கை அணி மேலும் 16 புள்ளிகளைப் பெற்ற போதும் பொஸ்வானா அணியின் முன்னிலையை தடுக்க முடியவில்லை. இறுதியில் பொஸ்வானா 58-54 என வெற்றி பெற்றது.

ஏற்கனவே பொஸ்வானா அணியுடன் நடைபெற்ற முதற் போட்டியில் இலங்கை அணி 51-70 தோல்வியடைந்திருந்தது. அடுத்து நடைபெற்ற பொலிஸ் அணியுடனான போட்டியில் 70-36 என வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் BDF கட்ஸ் அணியை 55-53 என வெற்றி பெற்றது.

உலகக்கிண்ண போட்டித் தொடர் இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

Social Share

Leave a Reply