மின்விநியோகத்தை துண்டிப்பதற்கான அவசியம் இதுவரை எழவில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் போதுமான மழை வீழ்ச்சி பதிவாகவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் தற்போது 37.7 விகிதமாக குறைந்துள்ளதுடன், இதன் காரணமாக நாட்டின் நீர்மின் உற்பத்தி 22 விகிதமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.