யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ள நிலை!

டெல்லி, இமாசல பிரதேசம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்த நிலை காரணமாக, பொதுமக்கள் பாரிய இன்னல்களை சந்திப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அந்த பகுதிகளில் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply