ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து நாளை (26.07) தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என ஒரு சில கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹதுன்நெந்தி தெரிவித்துள்ளார்.