நீர்கொழும்பில் சிறுமி ஒருவர் மாயம்!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல, சீதுவ பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சிறுமியின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை, மேலும் அவரை கண்டுபிடிப்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் நீர்கொழும்பு தலைமையகம் – 0718 591 630
நீர்கொழும்பு பொலிஸ் – 0312 222 227

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version