200 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த உலக வங்கி 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துடன் உரிய தொகையை பெற்றுக்கொள்வதற்கு உடன்படிக்கையை மேற்கொள்ள ஜனாதிபதி யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த தொகை மூன்று கூறுகளின் கீழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு 185 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பொருளாதார வலுவூட்டலுக்கான முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவதற்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும், ஒட்டுமொத்த திட்ட மேலாண்மை மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version