சர்வகட்சி மாநாடு அரசியல் சூழ்ச்சியாக அமையக்கூடாது – திஸ்ஸ அத்தநாயக்க!

சர்வகட்சி மாநாடு நாளை (26.07) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநாடு குறித்து பாராளுமன்ற திஸ்ஸ அத்தநாயக்க இன்று (25.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதன்படி சர்வ கட்சி மாநாடு உண்மையான நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் போது எந்தவொரு கலந்துரையாடலும் வெற்றியளிப்பதாகவும், இது அரசியல் விளையாட்டாகவும்,சூழ்ச்சியாகவும் அமையக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வ கட்சி மாநாட்டிற்கு தமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு கூற்றை முன்வைப்பதாகவும், சர்வ கட்சி மாநாட்டிற்கு முன்னர் ஆளும் தரப்பினர் ஒன்றிணைந்து ஒரு நிலைப்பாட்டை எட்டுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விஜயத்தின் பிற்பாடு சகல தேர்தல்களும் அடுத்த வருடத்திற்குள் நடத்தப்படும் என்ற எதிர்பாரப்பு நிலவுகிறது. சர்வகட்சி மாநாட்டிற்கு சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் எதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவிக்கப்படவில்லை.பல்வேறு காரணங்கள் இதற்கு தெரிவிக்கப்படுகின்றன.நோக்கம் பற்றிய தெளிவு எங்களுக்கு தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பானதாக இருந்தால் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோருகிறோம். ஜனாதிபதியின் செயற்பாடுகளாலையே ஆறு வருடங்களுக்கும் மேலமாக மாகாண சபையின் செயற்பாடுகள் முடக்கிக் கிடக்கின்றன. இந்தியாவை திருப்பதிப்படுத்தவும்,தமிழ் அரசியல் கட்சிகளை திருப்படுத்தவும் இந்த சர்வகட்சி மாநாடு அமையக் கூடாது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினது அபிப்பிராயமாகும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வரலாறு நெடுகிலும் இவ்வாறான அரசியல் நாடகங்களை கடந்திருக்கிறோம், நாட்டின் பொருளாதார நிலவரம், இலங்கை கிரிகெட் சபையில் இடம் பெற்று வரும் ஊழல் மோசடிகள், கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்படும் மோசடிகளை கூட ஏன் நடத்தாமல் இருப்பது என்பது எமக்கு பிரசிச்சினையாகும்.

விளையாட்டுத் துறை அமைச்சர் இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். நிதி மோசடி செய்யும் பிரதான சபையாக இலங்கை கிரிகெட் சபை மாறியுள்ளது. இது அரச நிறுவனமாகும். யாருக்கும் சொந்தமான தனி நிறுவனமல்ல. முறைகேடுகளை விசாரிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version