பாகிஸ்தான் அபார துடுப்பாட்டம். இலங்கை தோல்வியை நோக்கி?

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அபாரமான, அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் வெற்றி பெறக்கூடிய நிலையை பெற்றுள்ளது. இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பதம் பார்த்தனர். 132 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்த நிலையில் பாகிஸ்தான் அணி 563 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மூன்றாவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இலங்கை அணியின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களான பிரபாத் ஜயசூர்ய, கமிந்து மென்டிஸ் ஆகியோர் அழுத்தம் வழங்கக்கூடியளவில் பந்துவீசவில்லை. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அப்துல்லா சபிக் தனது முதல் இரட்டை சதத்தை பெற்றுக் கொண்டார். 201 ஓட்டங்களோடு அவர் ஆட்டமிழந்தார். இது அவரின் நான்காவது சதமாகும். ஏழாமிலக்க துடுப்பாட்ட வீரரான அஹா சல்மான் அதிரடியாக துடுப்பாடி சதம் பெற்றுக் கொண்டார். இது இவரின் இரண்டாவது சதமாகும். ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஷான் மசூட் 51 ஓட்டங்களையும், சௌட் ஷகீல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய இலங்கை அணியை அபாரமான பந்துவீச்சு மூலமாக தடுமாற வைத்து 48.4 ஓவர்க்ள் 166 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. தனஞ்சய டி சில்வா, டினேஷ் சந்திமால் இருவரும் ஓரளவு நிலைத்து நின்று ஐந்தவாது விக்கெட் இணைப்பாட்டமாக 85 ஓட்டங்களை பகிர்ந்தனர். அதற்கு முன்னர் 36 ஓட்டங்க்ளுக்கு 04 விக்கவெட்களை இழந்தது இலங்கை அணி. டினேஷ் சந்திமால் ஆட்டமிழந்த பின்னர் மேலும் ஒரு ஓட்டத்தில் ஆறாவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட அதிரடியாக அடித்தாட முனைந்த தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். டினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 27 ஓட்டங்களையும் டிமுத் கருணாரட்ன 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முன் வரிசை விக்கெட்களை வேகமாக கைபற்றிக் கொடுத்தனர். அந்த அழுத்தத்தை பாவித்து சகல விக்கெட்களையும் வேகமாக அவர்களால் கைப்பற்ற முடிந்தது.

வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 3 விக்கெட்களையும், ஷகின் ஷா அப்ரிடி ஒரு விக்கெட்டினையும், சுழற்பந்து வீச்சாளர் அப்பார் அஹமட் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 2 விக்கெட்கள் ரன் அவுட்ட மூலமாக வீழ்த்தப்பட்டன.

இரண்டாம் நாள் மழை காரணமாக 10 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற முதற் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் காணப்படுகிறது.

அணி விபரம்

இலங்கை: 1 திமுத் கருணாரட்ன, 2 நிஷான் மதுஷ்க, 3 குசல் மென்டிஸ், 4 அஞ்சலோ மத்யூஸ், 5 தினேஷ் சந்திமால், 6 தனஞ்சய டி சில்வா, 7 சதீர சமரவிக்ரம (Wk), 8 ரமேஷ் மென்டிஸ், 9 பிரபாத் ஜயசூரிய, 10 அசித்த பெர்னாண்டோ 11 டில்ஷான் மதுசங்க

பாகிஸ்தான் : 1 அப்துல்லா ஷபீக், 2 இமாம்-உல்-ஹக், 3 ஷான் மசூட், 4 பாபர் அசாம் (தலைவர்), 5 சர்பராஸ் அகமட் (WK), 6 சவுத் ஷகீல், 7 அகா சல்மான், 8 நோமன் அலி, 9 நசீம் ஷா, 10 அப்ரார் அகமட், 11 ஷகீன் ஷா அப்ரிடி

இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அபார துடுப்பாட்டம்

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் சிறப்பாக துடுப்பாடி வெற்றி பெறக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version