உலககிண்ண முடிவுகள் 24.10

20-20 உலககிண்ண தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் நேற்று ஆரம்பித்தன. நேற்றைய முதற் போட்டியில் அவுஸ்திரேலியா அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணிகளும் வெற்றி பெற்றன.

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடயிலான போட்டியில் நடைபெற்ற முதற் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய தென் ஆபரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது.
இதில் எய்டன் மார்க்ரம் 40(36) ஓட்டங்களை பெற்றார்.டேவிட் மில்லர் 16(18) ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் மிச்சேல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வூட் , அடம் சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 35 (34), மார்கஸ் ஸ்டோனிஸ் 24(16) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அன்றிச் நோர்ஜ்க்யா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இரண்டாவது போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கியிடையில் நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் மோசமான துடுப்பாட்டம் காரணமாக இங்கிலாந்து அணி இந்த போட்டியில்வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.2 ஓவர்களில், சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. க்றிஸ் கெயில் 13 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஆதில் ரஷீட் 4 விக்கெட்களையும், மொயீன் அலி, டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 24(22), ஜேசன் ரோய் 11 (10) இதில் அகீல் ஹொசெய்ன் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இன்று இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகள் முறையே 3.30 இற்கும் 7.30 இற்கும் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் மிகவும் விறு விறுப்பாக இருக்குமென நம்பபடுகிறது.

உலககிண்ண முடிவுகள் 24.10
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version