மகளிர் காற்பந்து உலக கிண்ண தொடரின் முதல் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைப்பதற்கான கடும் போராட்டத்தில் அணிகள் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று(27.07) நடைபெற்ற போட்டிகளின் படி குழு B இல் போட்டிகளை நடாத்தும் அவுஸ்திரேலியா அணி நைஜீரியா அணியிடம் தோல்வியை சந்தித்தது. 3-2 என நைஜீரியா வெற்றி பெற்றுக் கொண்டது. இந்தக் குழுவில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த அயர்லாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

குழு E இற்கான போட்டிகளில் அமெரிக்க மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது. மற்றுமொரு போட்டியில் போர்த்துக்கல் அணி வியட்னாம் அணியை 2-0 என வெற்றி பெற்றுக் கொண்டது. இரண்டு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்திக்கொண்ட வியட்நாம் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.