அரசாங்கம் உள்ளக முரண்பாடுகளை முதலில் தீர்க்க வேண்டும்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு  ஸ்திரமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையத்தில் நேற்று (27.07)  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் முதலில் அதன் நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

அதேபோன்று எந்த தேர்தலானாலும் அதனை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்ற விடயங்களை நாம் சர்வகட்சி மாநாட்டில் வலியுறுத்தியிருந்தோம்.

எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளக் கூடியவாறு நாம் சுதந்திர கட்சியை மீள்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதற்கமைய இனிவரும் தேர்தல்களில் முற்போக்கான கூட்டணியொன்றை அமைத்து அதன் ஊடாக போட்டியிட தீர்மானித்துள்ளோம்” என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version