இன்று (28.07) காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற இருவேறு மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கட்டுவதை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்று (27.07) மாலை மெதகம பகுதியில் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.