பாகிஸ்தான் அணி இந்தியா அணிக்கெதிரான உலக கிண்ண 20-20 போட்டியில் இலகுவான வெற்றியினை பெற்றுள்ளது.
உலக கிண்ண தொடரை ஒளிபரப்பு செய்யும் இநித்யாவை சேர்ந்த தொலைக்காட்சிகள், நேர்முக வர்ணனையாளர்கள்,முன்நாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள் என பலரும் பாகிஸ்தான் அணியினினை கடந்த கால உலக கிண்ண போட்டிகளை வைத்து கிண்டலடித்து நிகழ்ச்சிகளை செய்து ஒளிபரவுப்பு செய்தனர்.
ஆனால் பாகிஸ்தான் அணி இலகுவான வெற்றியினை இந்தியா அணிக்கெதிராக பெற்று மிக பெரிய பதிலடியினை வழங்கியுள்ளது.
உலகக்கிண்ண தொடரில் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா அ-ணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
இந்தபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.
இதில் விராட் கோலி 57(49) ஓட்டங்களையும் ரிஷாப் பண்ட் 39(30) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்களையும், ஹசான் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய பாக்கிஸ்தான் அணி 17.2 ஓவர்களில் விக்கெட்களை இழக்காமல் 152 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இதில் பபர் அஸாம்68(52), மொஹமட் ரிஷ்வான் ஆட்டமிழக்காமல் 78(55) ஓட்டங்களை பெற்றனர்.
இந்தியா அணியின் தெரிவும் இந்த போட்டியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக கருதலாம். கோலியின் தலைமை மீண்டும் கேள்விக்குறியாக மாறி வருகின்றது.
இந்தியா அணியின் 20-20 போட்டிகளின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக இந்த தோல்வியினை கருதலாம்.
நாளையதினம் (25/10/2021) இரவு 7:30இற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
