எரிபொருள் விலையையேற்றத்துக்கான வாய்ப்புகள் இபோதைக்கு இலையென எரிசக்தி மின் வலு அமைச்சர் உதயன் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உதயன் கம்பன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தைகளில் விலையேற்றம் ஏற்படும் போது பல நாடுகள் விலையேற்றத்தை செய்யவில்லை. அதேபோல எமது நாட்டிலும் விலையினை ஏற்றாமல் வைத்திருக்கும் திட்டமே உள்ளது.
மக்கள் விலையேற்றத்தினால் அவதிப்படும் நிலையில் எரிபொருள் விலையேற்றத்தையும் செய்து அவர்களை மேலும் அவர்கள் மீது சுமையேற்றி கஷ்டங்களை கொடுக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை ரூபாவினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
