பதுக்கிய 83,000 KG சீனி வெளிவந்தது. கட்டுப்பாட்டு விலையில் சீனி விநியோகம்

மேல்மாகாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83 ஆயிரம் கிலோ கிராம் சீனி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொவிட் காலப்பகுதியான நெருக்கடியான இந்தக் காலப்பகுதியில் மக்கள் சீனிக்கு அதிக விலை கொடுத்தும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறன நிலையில் பாரிய அளவிலான சீனி பதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் அவை கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறு பதுக்கப்பட்ட சீனியினை கைப்பற்றும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சீனியின் ஒரு தொகையினை சதொச மூலமாகவும், கூட்டுறவு நிலையங்கள் ஊடாகவும் மக்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனெரல் செனரத் நிவுன்ஹல்ல தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version