சிறுவனின் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், கிருமி தொற்று காரணமாக உயிரிழந்த சிறுவன் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

சுகாதாரத்துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்கள் தொடர்பில் மக்களின் அதிருப்தியை களைவதற்கு சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்  வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமியை உட்கொண்டதன் காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாத வயதுடைய ஆண் குழந்தை கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்திருந்தது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version