சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம்!

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.பி.விக்கிரமசிங்கவிற்கு இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு இவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன், இவருடைய இடத்திற்கு கொழும்பில் போக்குவரத்து பிரிவு ஒன்றுக்கு பொறுப்பாக இருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக வவுனியாவில் பொதுமக்களுக்கு தனது தொலைபேசி இலக்கத்தை வழங்கி அதன் மூலம் பல குற்றச் செயல்பளை கட்டுப்படுத்த துரிதமாக செயற்பட்டு வந்த நிலையிலேயே சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version