பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – பலர் பலி!

பாகிஸ்தானில் அரசியல் கூட்டம் ஒன்றின்பொது குண்டு வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் பஜூரின் தலைநகர் Khar பகுதியில், மதகுரு மற்றும் அரசியல் தலைவரின் ஆதரவாளர்கள் நடத்திய குறித்த பேரணியிலேயே இந்த குண்டு வெடித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் 40 பேர் வரையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்த சம்பவத்திற்கு யாரும் பொருப்பேற்கவில்லை என தெரியவந்துள்ளது. மனித வெடிகுண்டு மூலம் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version