ஓமந்தை பகுதியில் கோர விபத்து!

வவுனியா ஓமந்தை  பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நேற்று (30.07) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன்  மற்றொருநபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஓமந்தை  இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவியந்திரம் மற்றும் பழுதடைந்துநின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில்  23வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

ஓமந்தை பகுதியில் கோர விபத்து!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version