நேற்று (30.07) மதியம் பேராதனை பிம்மல் வனப்பகுதியில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தால், குறித்த வனப்பகுதியில் உள்ள சுமார் 35 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள், வனவிலங்கு அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.