இந்திய சினிமாவின் உயரிய விருது பெற்ற ரஜனி

2019ம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய சினிமாவின் தேசிய விருது நிகழ்வு கொவிட் தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்தியாவின் 67வது தேசிய திரைப்படவிழாவான இந் நிகழ்வில்  தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டிற்கான சிறந்த நடிகராக அசுரன் திரைப்படத்திற்காக தனுஷிற்கும், சிறந்த துணை நடிகருக்காக சுப்பர் டியுலெக்ஷ் திரைப்படத்திற்காக விஜய்சேதுபதிக்கும், சிறந்த இசையமைப்பாளராக விசுவாசம் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் இமானிற்கும், சிறந்த நடுவர் தேர்வு விருது ஒத்த செருப்பு திரைப்படத்திற்காக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்தீபனிற்கும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக கேடி (எ) கருப்புதுரை திரைப்படத்திற்காக நாகவிஷாலிற்கும் வழங்கப்பட்டது.

அத்துடன் சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகையாக மணிகர்ணிகா திரைப்படத்தித்திற்காக நடிகை கங்ணாரணவத் விருது பெற்றார்.

இதனையடுத்து இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது தமிழ் சினிமாவின் சுப்பர் ஸ்டார் நடிகர் ரஜனிகாந்திற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ் திரையுலகில் நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் கே.பாலச்சந்தருக்கு அடுத்து நடிகர் ரஜனிகாந் இவ்விருதைப் பெற்றுள்ளதுடன் அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் உயரிய விருது பெற்ற ரஜனி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version