நாட்டில் ஒரு புத்திசாலி அரசாங்கமல்லாமல் ஒரு பேரிடர் அரசாங்கமே உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிததுள்ளார்.
தேசபக்தி,தேசிய அடையாளம் போன்ற அனைத்தும் டொலர் நோட்டுகளுக்கு முன்னால் சிதறுண்டு போயுள்ளதாக தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர்,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன் அரசாங்கம் மண்டியிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரிசிங்க காமினி யின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) அம்பலாந்தோட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார்.
இன்று மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் உருவாக்கியது தற்போது ஆட்சியுள்ள அரசாங்கமே என கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் அப்பாவி விவசாயிகள் தரமான உரத்தையே கோருகின்றனர் என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மாறாக உரத் துக்கத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக தெரிவித்த சஜித், இந்த உர மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இந் நாட்டின் விவசாயிகளுக்கு நீதி வழங்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
