மீண்டும் ஓர் கறுப்பு ஜுலைக்கு வித்திடும் அரசு!

துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜுலைதின நிகழ்வு நேற்று (31.07) மாலை துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஜுலைக்கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ”மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு அரசு வித்திடுகின்றது. பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 திருத்த சட்டத்தில் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும்” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிகழ்வில் அம்பாரைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் காரைதீவுப் பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் தமிழசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் உட்பட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version