கதிர் விட்டுவரும் நெற் செய்கை வயல்களுக்கு தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் இன்னும் தொடர்கிறது என்றாலும்,மோசடியான அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அது பற்றி எந்தவித அக்கறையும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சுமார் 75,000 ஏக்கர் பயிரிடப்பட்ட காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்க அரசாங்கம் இன்னும் தவறிவிட்டது,அதில் 65,000 ஏக்கரில் மட்டும் நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது.தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு எதிர்வரும் வாரத்தில் நெற் செய்கையில் 16.81 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து அரசாங்கம் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் பாரிய அனர்த்தம் ஏற்படுவதை தடுக்க முடியாதுபோகும் என்பதோடு,உரத்தடைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தன்னிச்சையான முடிவுகளை அரசாங்கம் நினைவுகூர வேண்டுமென நினைவூட்டுவதக்கவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், நாடு முழுவதும் சோறு போடும் விவசாயிகளின் வாழ்வோடு விளையாடுவதனால் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் மட்டுமல்லாது நாடு முழுதும் அனுபவிக்க நேரிடும் எனவும் நாட்டின் விவசாயத்தை முடக்குவதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் நுட்பமான மற்றும் தந்திரமான முயற்சியா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை மேலும் ஏமாற்றாமல் அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான தண்ணீரை அரசாங்கம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்துவதக்கவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எப்பொழுதும் மக்களுக்கு சார்பான செயற்பாடுகளையேயன்றி மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்து வருகின்றது.அதன் விளைவுகள் அரசாங்கத்துக்கு பேரிடியாக விழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.