மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி தனது முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.  

பணவீக்கம் மற்றும் பிற முக்கிய பொருளாதார மாறுபாடுகளின் நடத்தை மீதான மத்திய வங்கியின் கண்ணோட்டத்தை பணவியல் கொள்கை அறிக்கை, வெளிப்படுத்துகிறது. 

இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன்  ஜூன் 2023 இல், வெளிநாட்டு ஊழியர்களின் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா வருவாய் ஆகியவை முந்தைய ஆண்டை விட தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 வரவு செலவுத் திட்ட ஆதரவிற்காக உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதன் மூலம், ஜூன் மாத இறுதிக்குள் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version