சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இரண்டாவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்து சேரும் என்றும் அமைச்சர் கூறினார்.

பெற்றோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெட்ரோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version