முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

முச்சக்கரவண்டி கட்டணம் திருத்தப்படமாட்டாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஊடாக முச்சக்கரவண்டி கட்டணங்கள் பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை இவ்வாறு கட்டணங்கள் திருத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாதாந்தம் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதன் காரணமாக முச்சக்கரவண்டி கட்டணத்தையும் மாதாந்தம் மாற்றுவது சாத்தியமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதும், குறித்த குழுவினால் இதுவரை அவ்வாறானதொரு ஒழுங்குபடுத்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கட்டணக் கட்டுப்பாடு இல்லாத காரணத்தால், அரசாங்கத்தின் தீர்மானங்களின்படி முச்சக்கர வண்டி கட்டணங்களை திருத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version