ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாளின் முதற் போட்டியில் தம்புள்ள ஓரா அணி இலகுவான வெற்றியினை பெற்றுக்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய யாழ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சரித் அஸலங்க 56 ஓட்டங்களையும், டௌஹித் ரிதோய் 24 ஓட்டங்களையும் பெற்றனர். ரஹ்மனுள்ள குர்பாஸ், டேவிட் மில்லர் ஆகியோர் தலா 14 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். தம்புள்ள அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 2 விக்கெட்களையும், ஷஹன்வஸ் டஹானி, ஹெய்டன் கெர், தனஞ்சய டி சில்வா, நூர் அஹமட், ரவிந்து பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ள ஓரா அணியினர் 16.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதில் அவிஷ்க பெர்னாண்டோ 52 ஓட்டங்களையும், குஷல் பெரேரா ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டுனித் வெல்லாளகே, விஜயகாந் வியாஸ்காந் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் தம்புள்ள அணி தமது முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.