அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றின் இறுதிக்கட்ட போட்டிகளில் இன்று(01.08) குழு D மற்றும் குழு E இற்கான போட்டிகள் நடைபெற்றன.
சீனா மகளிர் அணியினை 6-0 என வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி குழு D இல் முதலிடம் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. டென்மார்க் அணி ஹெய்ட்டி அணியினை 2-0 என வெற்றி பெற்று இரண்டாமிடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது. சீனா அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

குழு E இற்காக நடைபெற்ற போட்டிகளில் போர்த்துக்கல் மகளிர் மற்றும் அமெரிக்க மகளிர் அணிகள் கோல்களின்றி போட்டியினை நிறைவு செய்தன. இதன் காரணமாக அமெரிக்க அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக் கொள்ள, போர்த்துக்கல் மகளிர் அணி வாய்ப்பை இழந்தது. இதே குழுவில் நெதர்லாந்து மகளிர் அணி வியட்னாம் மகளிர் அணியை 7-0 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாக, வியட்னாம் அணி வெளியேற்றப்பட்டது.