லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாளின் இரண்டாவது போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி சிறந்த துடுப்பாட்டம் மற்றும் அபாரமான பந்துவீச்சின் மூலம் பி-லவ் கண்டி அணியை இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி’பெற்று 4 புள்ளிகளோடு முதலிடத்தை பெற்றுள்ளது.
83 ஓட்டங்களினால் காலி அணி பெற்றுக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் டைட்டன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆரம்பத்தில் காலி அணி மெதுவான ஆரம்பத்தை பெற்றனர். இருப்பினும் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறிய போது மத்திய வரிசையில் டிம் செய்பேர்ட், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் வேகமாக துடுப்பாடி அணியை மீட்டனர். டிம் செய்பேர்ட்டின் அதிரடியான துடுப்பாட்டம் இந்தப் போட்டியில் காலி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இன்றைய போட்டி நடைபெற்ற ஆடுகளம் மெதுவான ஆடுகளம் என்பதனால் இந்த ஓட்ட எண்ணிக்கையை கண்டி அணி துரத்தியடிப்பது இலகுவானதல்ல என முதலிலேயே எதிர்பார்க்கப்பட்து. இருப்பினும் இந்தளவு மோசமாக அவர்களது துடுப்பாட்டம் அமையுமென எதிர்பார்க்கவில்லை.
கஸூன் ரஜித மிக அபாரமாக ஆரம்பத்தில் பந்துவீசினார். அதனை தொடர்ந்து ரிச்சட் கராவா சிறப்பாக பந்துவீசினர். அனுபவமான துடுப்பாட்ட வீரர்கள் சந்திமால், மத்தியூஸ் ஆகியோரும் மோசமாக துடுப்படி ஆட்டமிழக்க கண்டி அணியின் கதை முடிந்து போனது. கடந்த வருடம் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொண்ட கண்டி அணி இம்முறை மோசமான ஆரம்பத்தை பெற்றுள்ளது.
ஐந்து அணிகளும் தலா இரண்டு போட்டிகளை நிறைவு செய்துள்ளன. இரு தினங்களுக்கு போட்டிகளில்லை. மீண்டும் 04 ஆம் 05 ஆம் திகதிகளில் கண்டி பல்லேகல மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
தனுக டபரே | பிடி – கசுன் ரஜித | லஹிரு சமரகோன் | 12 | 11 | 2 | 0 |
தினேஷ் சந்திமால் | பிடி – டிம் செய்பேர்ட் | கசுன் ரஜித | 00 | 02 | 0 | 0 |
கமிந்து மென்டிஸ் | பிடி – ஷெவோன் டானியல் | கசுன் ரஜித | 03 | 09 | 0 | 0 |
அஞ்சலோ மத்யூஸ், | Bowled | ரிச்சட் கராவா | 02 | 06 | 0 | 0 |
வனிந்து ஹசரங்க | பிடி – தப்ரைஸ் ஷம்சி | ரிச்சட் கராவா | 09 | 07 | 2 | 0 |
அஷேன் பண்டார | பிடி – அகில தனஞ்சய | தப்ரைஸ் ஷம்சி | 27 | 19 | 1 | 2 |
ஆஷிப் அலி | பிடி – அகில தனஞ்சய | ஷகிப் அல் ஹசன் | 16 | 21 | 1 | 0 |
அமீர் ஜமால் | Bowled | ஷகிப் அல் ஹசன் | 07 | 09 | 0 | 0 |
இசுரு உதான, | L.B.W | தப்ரைஸ் ஷம்சி | 16 | 12 | 3 | 0 |
முகமட் ஹஸ்னைன் | பிடி – கசுன் ரஜித | அகில தனஞ்சய | 00 | 06 | 0 | 0 |
முஜீப் உர் ரஹ்மான் | 00 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 19 | |||||
ஓவர் 17.1 | விக்கெட் 10 | மொத்தம் | 97 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
கசுன் ரஜித | 02 | 00 | 08 | 02 |
ரிச்சட் கராவா | 03 | 00 | 15 | 02 |
லஹிரு சமரகோன் | 02 | 00 | 08 | 01 |
தப்ரைஸ் ஷம்சி | 04 | 00 | 20 | 02 |
ஷகிப் அல் ஹசன் | 03 | 00 | 10 | 02 |
அகில தனஞ்சய | 3.1 | 00 | 21 | 01 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ஷெவோன் டானியல் | பிடி- கமிந்து மென்டிஸ் | 25 | 31 | 3 | 1 | |
லசித் குரூஸ்புல்லே | Run Out | 11 | 14 | 1 | 0 | |
பானுக ராஜபக்ச | பிடி- தனுக டபரே | 04 | 07 | 0 | 0 | |
டிம் செய்பேர்ட் | பிடி- வனிந்து ஹசரங்க | முகமட் ஹஸ்னைன் | 74 | 39 | 5 | 5 |
ஷகிப் அல் ஹசன் | Run Out | 30 | 21 | 0 | 2 | |
தசுன் ஷானக | ||||||
லஹிரு சமரகோன் | ||||||
உதிரிகள் | 21 | |||||
ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 180 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
முஜீப் உர் ரஹ்மான் | 04 | 00 | 25 | 00 |
இசுரு உதான | 04 | 00 | 30 | 00 |
அமீர் ஜமால் | 03 | 00 | 43 | 01 |
முகமட் ஹஸ்னைன் | 04 | 00 | 26 | 01 |
வனிந்து ஹசரங்க | 04 | 00 | 27 | 01 |
கமிந்து மென்டிஸ் | 01 | 00 | 16 | 00 |
அணி விபரம்
பி-லவ் கண்டி : தினேஷ் சந்திமால், தனுக டபரே, அஞ்சலோ மத்யூஸ், இசுரு உதான, கமிந்து மென்டிஸ், வனிந்து ஹசரங்க (c), அமீர் ஜமால், முகமட் ஹஸ்னைன், முஜீப் உர் ரஹ்மான், ஆஷிப் அலி, அஷேன் பண்டார
கோல் டைட்டன்ஸ்: ஷெவோன் டானியல், லசித் குரூஸ்புல்லே, பானுக ராஜபக்ச, டிம் செய்பேர்ட்(wk), ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), லஹிரு சமரகோன், தப்ரைஸ் ஷம்சி, கசுன் ராஜித, அகில தனஞ்சய, ரிச்சட் கராவா