தமிழர்களுக்காக வாதிடும் முதல் தலைவராக ட்ரூடோ இருக்க வேண்டும்!

பொது வாக்கெடுப்பை நடாத்துவதற்கு கனடா பிரதமர்  பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று (001.08) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட உறவினர்கள், தமிழர் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்குமாறு கனேடிய பிரதமருக்கு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம்.

தமிழர்களுக்கு உண்மையில் நடந்தது இனப்படுகொலை என்பதை பிரதமர் ட்ரூடோவின் அறிக்கைக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கனேடிய தமிழ் எம்.பி.யை தனது அமைச்சரவையில் பயன்படுத்தியதற்காக நன்றியையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்கள் புத்திசாலித்தனமான மற்றும் உறுதியான மக்கள், ஆனால் இலங்கையில் தமிழர்கள் அடிமைப் பொருளாதாரத்தில் வாழ்கின்றனர். தமிழர்களுக்கான உரிமம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை மட்டுப்படுத்தி நாம் என்ன மாதிரியான வேலை செய்ய வேண்டும்  என்பதை சிங்களவர்களே முடிவு செய்வார்கள்.

எனவே இலங்கையின் வடகிழக்கில் தமிழர் இறையாண்மை கொண்ட தாயகம்  எமக்கு வேண்டும். இதற்காக எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பை ஐநா நாடாத்தி அவதானிக்க வேண்டும்.

பிரதமர் ட்ரூடோ உலகில் எங்களுக்காக பொது வாக்கெடுப்புக்கு வாதிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேற்குலகத் தலைவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் முதல் தலைவராக பிரதமர் ட்ரூடோ இருக்க வேண்டும்.

முழுத் தமிழர் தாயகமும் சிங்கள ஆக்கிரமிப்பின் மூலம்,  சிங்கள ஆதிக்கப் பிரதேசமாக மாறுவதற்கு முன்னர், பிரதமர் ட்ரூடோ தாமதமின்றி விரைவில் ஒரு வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply