கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத் தேவைகளுக்காக நீர் திறந்துவிடப்படுவதால் தென் மாகாணத்தில் நாளொன்றுக்கு 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கபட வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து அனல்மின் நிலையங்களிலிருந்தும் தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் மின்சாரம் வழங்கி நாட்டின் மின்சாரத் தேவையை எரிபொருளைக் கொண்டு பூர்த்தி செய்வதால் இலங்கை மின்சார சபைக்கு 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வரும் பின்னணியில் மின்சாரத்தை துப்பிடிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.