சேதுசமுத்திர திட்டத்திற்கு பதிலாக வேறு திட்டம் குறித்து ஆராய்வு!

இலங்கை, இந்தியாவை இணைக்கும் இராமர் பாலதிட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்திய இந்திய விஜயத்தின்போது இலங்கை துறைமுகங்களுடன் தொடர்பை அதிகரிப்பதற்காக தரைரீதியிலான தொடர்புகள் குறித்து ஆராயப்பட்டது. 

 நீண்டகாலத்திற்கு முன்னர் இதேயோசனை முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த பாலத்தை நிர்மாணிப்பதால், இந்து மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

இதன்காரணாக இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான தரைவழித் தொடர்பை ஏற்படுத்த வேறு திட்டங்கள் குறித்து ஆராயப்படுவதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version