தரமற்ற மருந்து விநியோகத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் மருமகனுக்கும் தொடர்பு?

அண்மைக்காலமாக நாட்டில் சுகாதாரத்துறை மிக மோசமான வீழ்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், தரமற்ற மருந்து கொள்வனவின் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், தரமற்ற மருந்து கொள்வனவில் பாராளுமன்ற உறுப்பினரின் மருமகனுக்கு தொடர்பிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மகளின் கணவருக்குச் சொந்தமான நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் மருந்துகளில் 10%-24% மருந்துகள் குறைபாடுள்ளவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் இந்நிறுவனம் வழங்கிய கணிசமான அளவு மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply