அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (02.08) வலுவடைந்துள்ளது.
மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 309.70 ரூபாவாகவும் விற்பனை விலை 322.68 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை கடந்த ஜூலை 31ஆம் திகதி டொலரின் கொள்வனவு விலை 322.96 ரூபாவாகவும் விற்பனை விலை 335.40 ரூபாவாகவும் காணப்பட்டது.