கந்தானையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்!

கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று (24.080 அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த வீடு வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், சந்தேகநபர்கள் அவரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஹீனத்தியான மகேஷ், கந்தனே சுதுமல்லி மற்றும் கம்பஹா வருண ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version