சியோலில் கத்திகுத்து தாக்குதல் -14 பேர் காயம்!

தென்கொரிய தலைநகர் சியோலை அண்மித்த பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை இளைஞர் ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று பின்னர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் “சியோங்னம்” என்ற பகுதியில்  நேற்று (03.08) இடம்பெற்றுள்ளது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 20 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சரக்கு போக்குவரத்தில் பணிபுரியும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version