உகாண்டாவில் படகு விபத்து – 20 பேர் பலி!

உகண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணித்தமை மற்றும் அளவுக்கு அதிகமான பொதிகள் ஏற்றப்பட்டிருந்தமையே விபத்துக்கு காரணம் என உகண்டா பொலிஸ் தலைமையகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தலத்தில் பதிவிட்டுள்ளது.

காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகளில், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்களும் ஈடுப்பட்டுள்ளதுடன், இதுவரை ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

உகண்டா மற்றும் கொங்கோ எல்லையிலுள்ள அல்பர்ட் ஏரியிலும், 2018 இல் விக்டோரியா ஏரியிலும் உல்லாசப் படகுகள் மூழ்கியதில் 32 பேர்வரை பலியானதுடன், அதே ஆண்டு செப்டம்பரில் விக்டோரியா ஏரியின் தான்சானியா பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version